விமல் வீரவன்சவின் சகோதரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

Adjust the font size:     

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவை பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி அவர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பொறியியல் கூட்டுத்தாபன வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் சரத் வீரவன்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

#incident #engineering #ordered #weerawansas #caused #sarath #minister #after #before #which
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post