சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி உள்ளிட்ட மூவருக்கு எதிராக பதுளை மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை இன்று (28) அறிவிக்கப்படவுள்ளது.
2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அல்லது அதற்கு அருகில் பண்டாரவளை பஸ் நிலையத்திற்கு அருகில் ஜீப்பில் பயணித்த போது, பொலிஸ் ஜீப் ஒன்று தனது ஜீப்பை முந்திச் சென்றதால் கோபமடைந்த சமிந்த விஜேசிறி, அவர் சென்ற ஜீப்பின் பாதையை மறித்து அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகளை தாக்கி காயப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நீண்டகாலமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
#today
#injured
#sentencing
#stated
#verdict
#around
#scheduled
#others
#angry
#police
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News