அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22) மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளது.
அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் சந்தேகநபராக முன்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த விக்ரமசூரிய தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்த்து வருகின்றார்.
அதன்படி, இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்று டிசம்பர் 09 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
#former
#criminal
#attorney
#general
#produced
#jaliya
#previously
#directing
#pasan
#government
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News