15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்க பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடையை விதித்த முதல் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையை முதன்முதலில் அமல்படுத்தியதன் மூலம் ஆஸ்திரேலியா கடந்த ஆண்டு பிற்பகுதியில் வரலாறு படைத்தது.
பிரித்தானிய அரசாங்கம் கடந்த மாதம் இதே போன்ற கட்டுப்பாடுகளை அறிவித்தது, இது அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வர உள்ளது.
ஸ்பெயின், கிரீஸ் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு குறைந்தபட்ச வயது வரம்புகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
வரும் செப்டம்பரில் தொடங்கும் புதிய கல்வியாண்டுக்கு இந்த விதிகளை அமல்படுத்தும் நோக்கத்தில், நாடாளுமன்றத்தின் மூலம் மசோதாவை விரைந்து நிறைவேற்றுமாறு பிரான்ஸ் அரசுக்கு அதிபர் மக்ரோன் உத்தரவிட்டுள்ளார்.
பிரான்சின் ஆடியோவிஷுவல் மற்றும் டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் ரெகுலேட்டரான ஆர்காம் மூலம் இந்த புதிய சட்டம் அமுல்படுத்தப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.