எதிர்க்கட்சிகள் இன்று அச்சமடைந்துள்ளதால், எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தின் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோஷன எகொடௌயன தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று (24) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், கடந்த காலங்களிலும் சிறைச்சாலைகளில் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், அவ்வாறான சந்தர்ப்பங்கள் எதிலும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
சட்டம் ஒழுங்கு தொடர்பில் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளால் எதிர்க்கட்சிகள் அச்சமும் கிளர்ச்சியும் அடைந்துள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்கு எதிராக நேற்று (23) நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா பங்கேற்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோஷன எகொடௌயன சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவரால் "virtual" அமைச்சரவையை மாத்திரமே உருவாக்க முடியும் எனவும் அதற்குள் கூட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேராவுக்கு அமைச்சுப் பதவி கூட கிடைக்காது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.