நீதித்துறையில் தன்னிச்சையான திருத்தங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும், அவசர அவசரமாக மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் மக்களின் நம்பிக்கையை சிதைப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) சுட்டிக்காட்டியுள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று (24) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், நீதிபதிகள் குழுவிற்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது, இந்த திருத்தத்திற்கு எதிராக 65-0 என வாக்களித்ததாக குறிப்பிட்டார்.
இந்த சட்டத்திருத்தம் நல்லது என்று ஒரு நீதிபதி கூட கூறவில்லை என்றும், அந்த நீதிபதிகளை அரசு தற்போது வேட்டையாடத் தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
இது நீதிபதிகளுக்கு எதிரான சூனிய வேட்டைக்கு சமம் என்பதாலும், நீதியமைச்சர் ஒரு சிறந்த கலைஞராக இருப்பதாலும், "Judges Hunt." என்ற தலைப்பிலான திரைப்படத்தை கூட அவர்கள் தயாரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டார்.