போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்டங்களை இயற்றும் போது அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் எதிர்கட்சியின் சில தரப்பினர் இவ்வாறு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை முன்வைக்கும் போது காயமடைகின்றனர் என அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இன்று (24) இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் வரலாற்றில் இடம்பெறும் முதல் மோதல் அல்ல எனவும் சிறைச்சாலை அமைச்சரோ அல்லது அரசாங்கமோ சிறைச்சாலை வசதிகளை மேம்படுத்தி தேவையான புதிய பௌதீக வளங்களை வழங்கி கைதிகளின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பை தட்டிக்கழிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
தமது கட்சியின் நிறம் மனித உடலில் ஓடும் இரத்தத்தின் நிறம் என்றும், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தனது கட்சியை சேர்ந்த ஒருவரை வீழ்த்த முயற்சித்தால், 159 எம்.பி.க்கள் மட்டுமல்ல, இன்னும் ஒரு இலட்சக்கணக்கான 'குடும்பம்' வெளியில் நிற்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவரின் "Judges Hunt," என்ற தலைப்பிலான திரைப்படத்தை தயாரிக்கும் யோசனைக்கு பதிலளித்த அமைச்சர், அதற்கு முன்னர் "The Treasure Robbery" என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டால், அது மிகவும் பிரபலமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.