2.5% வீதமாக இருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தரப்பினர் பல்வேறு குழுக்களை அணிதிரட்டி தற்போதைய NPP அரசாங்கத்திற்கு எதிராக நாமல் ராஜபக்சவுடன் இணைந்து படிப்படியாக முன்னேறி வருவதாக சட்டத்தரணி சாமரி பிரியங்கா தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பொய்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருவதாகக் குறிப்பிட்டார்.
ஆரம்பத்தில் ராஜபக்சக்களுக்கு மத்தியில் உள்ள 'திருடர்களை' பிடிப்பதாக வாக்குறுதி அளித்து பதவிக்கு வந்த NPP அரசாங்கத்தின் பொய்களை அவர்கள் இப்போது வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.
தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து எழுச்சி பெறுமாறு சட்டத்தரணி சாமரி பிரியங்கா மேலும் அழைப்பு விடுத்துள்ளார்.