தெவிநுவர உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹெரவை முன்னிட்டு 650 பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 100 உத்தியோகத்தர்களும் கடமைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உளவுத்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தில் வருடாந்த எசல பெரஹெராவின் முதலாவது பேலி பெரஹெரா இன்று (23) ஆரம்பமாகி ஜூலை 29 ஆம் திகதி மஹா பெரஹரவைத் தொடர்ந்து நிறைவுபெறவுள்ளது.
காவடி பெரஹெரா ஜூலை 28 ஆம் திகதியும், ரந்தோலி பெரஹெரா ஜூலை 29 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியில் அந்த நாட்களில் மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதற்கான அறிவிப்பு கீழே உள்ளது.