பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தியும், பொலிஸ் அதிகாரிகளாக போலியாகக் காட்டிக் கொண்டும் சமூக ஊடக வலையமைப்புகள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகளைப் புகாரளிக்க பொலிஸ் பல தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வாறான மோசடிகள் தொடர்பில் தமக்கு முன்னரும் தமக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், மக்கள் மீண்டும் மீண்டும் மோசடிகளுக்கு இரையாகிக் கொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக பொலிஸார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
கணினி அல்லது கைத்தொலைபேசிகள், போலியான வாட்ஸ்அப் கணக்குகள் மற்றும் டெலிகிராம் கணக்குகள் போன்றவற்றைப் பயன்படுத்தி பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைக் காட்டி இந்த மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தவொரு விசாரணைக்கும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை எனவும், அவ்வாறு மோசடி செய்யும் நபர்கள் அல்லது குழுக்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறும், அது தொடர்பான முறைப்பாடுகளை 071 859 2918, 071 859 2918, 071 859 1765 அல்லது 011 230 075 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் மேற்பார்வை அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்குமாறும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.