பாராளுமன்றம் இன்று (23) மீண்டும் கூடவுள்ளது.
இதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரையான நேரம், நிலையியற் கட்டளைகள் 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற அலுவல்கள் 1 முதல் 6 மணி வரை ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடை தேவைப்படும் கேள்விகளுக்கும், முற்பகல் 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின், முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ், 2493/03 மற்றும் 2493/39 ஆகிய அதிவிசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட இரண்டு ஒழுங்குமுறைகள் ஒப்புதலுக்காக விவாதிக்கப்படும்.
அதனையடுத்து, ஆளும் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணையை பிற்பகல் 2.30 மணிக்கு விவாதம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாலை 5.30 மணி வரை