தங்கம் மற்றும் பணத்துடன் 10 பேர் கைது

Adjust the font size:     

கண்டி வத்தேகம பகுதியில் தங்கம் மற்றும் பணத்துடன் இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தங்கத்தில் சுமார் நான்கு கிலோகிராம் எடையுள்ள நான்கு தங்க கட்டிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகநபர்களிடம் இருந்து 16.9 மில்லியன் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

3 கிலோகிராம் 930 கிராம் எடையுள்ள நான்கு தங்கக் கட்டிகளில் ஒரு தங்கக் கட்டி சுமார் 1.5 கிலோகிராம் எடையுள்ளதாகவும், அதன் பெறுமதி சுமார் 16.9 மில்லியன் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தங்கக் களஞ்சியங்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டதுடன், பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் உரிமையை உறுதிப்படுத்தும் ரசீதுகள் எதையும் சந்தேகநபர்கள் சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை வத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு இன்று (23) கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#items #weighing #possession #seized #approximately #suspect #illegally #kandy #further #colombo
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post