சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகு மற்றும் படகில் இருந்த 09 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி 50க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் இரணைதீவுக்கு தெற்கே இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்து வருவதாக கடற்படையினர் அவதானித்துள்ளனர். கடற்படையினர் உடனடியாக அந்த கப்பல்களை விரட்டுவதற்கான விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
தப்பிச் செல்ல முயன்ற மீன்பிடி படகு ஒன்றும், அதில் இருந்த 09 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்ட கடற்றொழில் பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.