இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Adjust the font size:     

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட காலநிலை நிலவும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#hambantota #northwestern #conditions #times #todays #about #winds #thundershowers #showers #after
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post