2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்கள் யார் என்பதை பொதுமக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என பிரதி அமைச்சர் அனுர ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய பிரதி அமைச்சர், அப்போது தோற்கடிக்கப்பட்ட அரசியல் அதிகாரமானது மோசமான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய வலையமைப்புகளை உள்ளடக்கியதாக இருந்தது என்று குறிப்பிட்டார்.
அடுத்த 25 வருடங்களுக்குள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் போட்டியிடும் திறன் கொண்ட ஒரு தனி நபரை காட்டுமாறு அவர் சவால் விடுத்தார். தேசிய மக்கள் சக்திக்கு (NPP) எதிராக தேர்தலில் நேருக்கு நேர் போட்டியிடும் திறன் கொண்ட தலைவர், வளர்ந்து வரும் தலைவர், கட்சி அல்லது இயக்கம் தற்போது இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான போட்டியாளர்கள் இருப்பின், அவர்களும் தம்மைப் போன்று "முற்றிலும் தனியான குழுவாக" இருக்க வேண்டும் என பிரதி அமைச்சர் அனுர ஜயசேகர மேலும் வலியுறுத்தினார்.