வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தில் எதிர்வரும் ஜுலை 28ஆம் திகதி இடம்பெறும் வருடாந்த எசல மகா பெரஹராவில் இருந்து காவடி நடனக் கூறுகளை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த அறிவித்தலின் பிரகாரம், இவ்வருட பெரஹரவில் இருந்து காவடி நடனத்தை நீக்குமாறு மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன தெவிநுவர பஸ்நாயக்க நிலமேவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 28ஆம் திகதி நடைபெறவுள்ள பெரஹராவில் பெருமளவான மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#orders
#police
#attend
#issued
#basnayake
#necessary
#informed
#kavadi
#district
#historic
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News