இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Adjust the font size:     

எதிர்வரும் ஜுலை 28ஆம் திகதி தொடக்கம் அடுத்த சில தினங்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சியில் சற்று அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட காலநிலை நிலவி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

#sabaragamuwa #accordingly #hambantota #districts #weather #matara #northwestern #nuwara #northcentral #todays
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post