பெல்லன்வில பிரதேசத்தில் நேற்று (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்படி, குறித்த சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வந்த மோட்டார் சைக்கிளின் சாரதியும் நவகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நேற்று இரவு 7.45 மணியளவில் பெல்லன்வில நடைபாதையின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரைக் குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றதுடன், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 55 வயதுடைய நபர் ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.