ஊழல் குற்றச்சாட்டில் தென் மாகாண முன்னாள் பிரதம செயலாளர் கைது

Adjust the font size:     

முன்னாள் தென் மாகாண பிரதம செயலாளர் ரன்னுலு சந்திரசிறி டி சொய்சா, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு தென் மாகாண அபிவிருத்தி அதிகாரசபையானது தென் மாகாணத்தில் உள்ள பொது தன்னார்வச் சங்கங்களுக்கு கதிரைகள் வழங்கும் திட்டத்தை தென் மாகாண சபை உறுப்பினர்களின் ஒதுக்கீடான ரூ. 16.5 மில்லியன். நிர்ணயிக்கப்பட்ட அரச கொள்முதல் நடைமுறைக்கு புறம்பாக உற்பத்தி நிறுவனமொன்றை தெரிவு செய்து அந்த நிறுவனத்திற்கு தேவையற்ற அனுகூலத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியமைக்காகவே அவர் மீது இந்த ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான முன்னாள் பிரதம செயலாளர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

#allegation #scheduled #procurement #magistrates #chief #arrested #leveled #state #chairs #suspect
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post