பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தெவிநுவர பெரஹெரா இன்று நடைபெறவுள்ளது

Adjust the font size:     

தெவிநுவர ஸ்ரீ உத்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹெர திருவிழா இன்று (28) இடம்பெறவுள்ளது.

அதன்படி, காவடி நடனத்தையும் உள்ளடக்கிய வகையில் குறித்த ஊர்வலத்திற்கான விசேட பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ஊர்வலத்தின் போது பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், புலனாய்வு அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெவிநுவர பெரஹெராவின் போது இரண்டு குற்றக் கும்பல் உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து காவடி நடனத்தை நிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் அண்மையில் பரிந்துரை செய்திருந்தார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் தீர்மானிப்பதற்காக மாத்தறை மாவட்ட செயலகத்தில் நேற்று (27) பிற்பகல் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், கடந்த வருடங்களில் காவடி நடனத்தில் பங்குபற்றிய அனைத்து குழுக்களுக்கும் இம்முறையும் காவடி ஆட அனுமதி வழங்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

#security #stated #accordingly #district #festival #matter #annual #recently #decide #perahera
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post