2026ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று வரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,905 ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்த பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் நேற்று (24) வரை பதிவாகியுள்ள பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,530 ஆகும்.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அதிகூடிய நோயாளர்களைக் கொண்ட மாவட்டங்களாக கம்பஹா மாவட்டம் 17,135 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 16,140 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 5,574 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
#colombo
#yesterday
#gampaha
#states
#reported
#identified
#25530
#reaches
#patients
#16140
Article Link:
How do you feel about this news?
Advertisement
Related Tags:
News