வீரவிலவில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் 19 பேர் காயமடைந்துள்ளனர்

Adjust the font size:     

மாத்தறை – திஸ்ஸ பிரதான வீதியின் வீரவில பிரதேசத்தில் பஸ்ஸொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 11 ஆண்கள் மற்றும் 08 பெண்கள் உட்பட 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திஸ்ஸமஹாராமவில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று வீரவில பிரதேச செயலகத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#collision #nearby #condition #conducting #incident #mataratissa #matara #collided #police #stated
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post