வெளிநாட்டு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய முறைமையில் உள்ள பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

Adjust the font size:     

வெளிநாட்டு ஊழியர்களுக்கான உத்தேச பங்களிப்பு ஓய்வூதிய முறைமையில் உள்ள பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்து, இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சுக்காக 2026ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி செயலகத்தில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன் கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

தற்போது நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் முக்கிய துறைகளில் ஒன்றாக விளங்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முறையான ஓய்வூதிய முறைமையின் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது தொடர்பில் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

சுற்றுலாத்துறை தொடர்பான முன்மொழிவுகளை மாவட்ட மட்டத்தில் மிகவும் வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்காக, அந்த திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடுகளை நேரடியாக மாவட்ட செயலாளர்களின் பணத் தொகுப்பிற்கு வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் மூலம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் சுற்றுலாக் குழுக்களுக்கு இடையில் நல்ல ஒருங்கிணைப்புடன் தொடர்புடைய சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கான அறிவிப்பு கீழே உள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post