வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தங்குமிடமாக நுவரெலியா தபால் நிலையத்தின் மேல் தளத்தின் அபிவிருத்தி ஆரம்பம்

Adjust the font size:     

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் தங்குமிடமாக நுவரெலியா தபால் நிலையத்தின் மேல் தளத்தை அபிவிருத்தி செய்ய ஆரம்பித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தபால் நிலைய சேவைகள் தரைத்தளத்தில் பராமரிக்கப்படும் அதேவேளை சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தோம்பல் சேவைகளை வழங்குவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்படும் என பிரதி தபால் மா அதிபர் துசித ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்.

காலனித்துவ காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஐரோப்பிய கட்டிடக்கலை பாணியை பிரதிபலிக்கும் நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தின் தொன்மையை பாதுகாக்கும் வகையில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post