யோஷித ராஜபக்சவுக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணை எதிர்வரும் 24ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Adjust the font size:     

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்சவிற்கு எதிராக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (17) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றதுடன், வழக்குத் தொடரில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் வழிகாட்டுதலின் கீழ் வழக்குத் தரப்பு சாட்சிகளிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

யோஷித ராஜபக்ச சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் ஆஜராகி சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.

இதனையடுத்து மேலதிக சாட்சியங்களை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யோஷித ராஜபக்ச, 5 கோடிக்கு மேல் பெறுமதியான 5 காணிகளை கொள்வனவு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் 73 மில்லியன்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post