உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய ஊழியர் நம்பிக்கை நிதியச் சபையின் செயலில் உள்ள உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு தொழிற்பயிற்சி நெறிகளை கற்க நிதியுதவி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இவ்வாறு தகுதிபெறும் மாணவர்கள் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் தேசிய தொழிற்கல்வித் தகுதி (NVQ) நிலைகள் 3, 4, மற்றும் 5-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 100 தொழிற்பயிற்சி வகுப்புகளில் இருந்து ஒரு பாடத்திட்டத்தை தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பக் காலம் அக்டோபர் 30ஆம் தேதி வரை உள்ளது என்றும், இது தொடர்பான விரிவான தகவல்களை ETF வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான அறிவிப்பு கீழே உள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்