"புனருடையே புரவர" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் பெருந்தொகையான கிராம மக்கள் தமது அன்றாடப் பயணத்தில் எதிர்நோக்கும் சிரமங்களையும், பொருட்களை எடுத்துச் செல்வதில் அவர்கள் எதிர்நோக்கும் இடையூறுகளையும் கண்டறிந்து, அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விசேட செயற்திட்டம் இன்று (14) ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, இதனை நான்காண்டு திட்டமாக நடைமுறைப்படுத்த 881 பாலங்கள் தெரிவு செய்யப்பட்டதோடு, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 100க்கும் மேற்பட்ட கிராமப்புற பாலங்கள் ரூ. 1,050 மில்லியன் செலவில், இந்தப் பாலங்களின் நிர்மாணப் பணிகள் இன்று (14) நாடளாவிய ரீதியில் பொருத்தமான இடங்களில் ஆரம்பிக்கப்படும்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்