பசில் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட வழக்கில் ஆஜராகத் தவறியமைக்காக அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மாத்தறை பிரதான நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க நிராகரித்துள்ளார்.
மாத்தறை, எலியகந்த வீதி, பிரவுன்ஷில் பகுதியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணியை கொள்வனவு செய்தமை தொடர்பில், பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில், பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவு தாக்கல் செய்த வழக்கில், மே 22ஆம் திகதி, ஆஜராகத் தவறியமைக்காக, பசில் ராஜபக்ஷவுக்கு, இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்