மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் IEEE மாணவர் கிளையினால் 4வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட 'MoraForesight 4.0' மூன்று நாள் குடியிருப்பு தொழில்நுட்ப முகாமுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதன்படி, நாடளாவிய ரீதியில் விண்ணப்பித்துள்ள மாணவர்களில் விசேட மதிப்பீடு மூலம் தெரிவுசெய்யப்படும் திறமையான 100 மாணவர்களுக்காக பிரத்தியேகமாக நடாத்தப்படும் இந்த தனித்துவமான நிகழ்ச்சியானது முற்றிலும் இலவசமானதுடன் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு முழு வசதிகளுடன் இலவச தங்குமிட வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்