பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆளில்லா விமான சேவையை நாட்டில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, முன்னோடி திட்டமாக இந்த முயற்சி அமுல்படுத்தப்படும் என CAASL இன் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆளில்லா விமானங்கள் ஒவ்வொன்றும் ஆறு பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என்றும், சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இதுபோன்ற திட்டங்கள் தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்