கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் 2027 வரவு செலவு திட்ட முன்மொழிவு விசாரணை ஜனாதிபதி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் 2027 வரவு செலவு திட்ட முன்மொழிவு விசாரணை ஜனாதிபதி தலைமையில் - Theevukaran News கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் 2027 வரவு செலவு திட்ட முன்மொழிவு விசாரணை ஜனாதிபதி தலைமையில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் 2027 வரவு செலவு திட்ட முன்மொழிவு விசாரணை ஜனாதிபதி தலைமையில்
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் 2027 வரவு செலவு திட்ட முன்மொழிவு விசாரணை ஜனாதிபதி தலைமையில்

Adjust the font size:     

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு தொடர்பான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் அமுல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான வரவு செலவு திட்டத்திற்கு முந்திய கலந்துரையாடல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஏற்பாடுகள் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் ஒவ்வொரு பிரிவினாலும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களினாலும் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் தனித்தனியாக ஆராயப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

தம்புள்ளை, இங்கிரிய, வாழைச்சேனை, மில்லனியா மற்றும் கட்டுநாயக்க போன்ற பிரதேசங்களில் கைத்தொழில் வலயங்களை நிறுவும் வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இதன்போது காணி ஒதுக்கீடு மற்றும் மின்சாரம், நீர், வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு கீழே.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post