2030ஆம் ஆண்டுக்குள் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளால் செலவிடப்படும் டொலர் தொகையை கணிசமான அளவு அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2018-2019 இல் 171 டொலர்களுடன் ஒப்பிடும் போது, கோவிட்க்கு பிந்தைய காலத்தில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணி ஒருவர் $148 செலவழிப்பதாக அவர் கூறினார்.
களுத்துறை மாவட்ட சுற்றுலாத்துறையை வலுப்படுத்துவது தொடர்பாக இன்று (14) களுத்துறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சுற்றுலா பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
செலவிடப்படும் டொலர் தொகையை அதிகரிப்பதற்கு சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்த வேண்டும் எனவும், இது ஒரு திட்டத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பிரதியமைச்சர் ருவன் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்