உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அர்ஜென்டினா தகுதி பெற்றது

Adjust the font size:     

நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா 2026 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டத்தில், முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை, 55வது நிமிடத்தில் இங்கிலாந்தின் அந்தோனி கார்டன் முதல் கோலை அடித்தார்.

அதன்பின்னர், அர்ஜென்டினா சார்பில் என்ஸோ பெர்னாண்டஸ் முதல் கோலைப் போட்டார், கூடுதல் நேரத்தின் 2வது நிமிடத்தில் லாடரோ மார்டினெஸ் அர்ஜென்டினாவின் வெற்றி கோலைப் போட்டார்.

அதன்படி ஆட்டம் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவுக்கு வெற்றியைத் தேடித்தந்தது.

அதன்படி இந்த ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post