கட்டார் முன்னாள் அமீர் அவர்களின் மறைவுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் ஒட்டுமொத்த இலங்கை மக்களின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதற்காக கட்டார் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (16) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாடு திரும்பினார்.
கத்தாரின் தோஹாவில் உள்ள லுசைல் அரண்மனைக்கு சென்ற பிரதமர், அந்நாட்டின் தற்போதைய அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானியை சந்தித்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின், அல் வஜ்பா அரண்மனையை வந்தடைந்த பிரதமர், கத்தார் அமீரின் தாயாரும், கட்டார் அறக்கட்டளையின் தலைவருமான ஷேக்கா மோசா பின்த் நாசரிடம் இலங்கை அரசின் இரங்கலையும் தெரிவித்தார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்