மாகாண சபைத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அனர்த்த நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படவில்லை - பிரதமர் மாகாண சபைத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அனர்த்த நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படவில்லை - பிரதமர் - Theevukaran News மாகாண சபைத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அனர்த்த நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படவில்லை - பிரதமர் மாகாண சபைத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அனர்த்த நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படவில்லை - பிரதமர்
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

மாகாண சபைத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அனர்த்த நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படவில்லை - பிரதமர்

Adjust the font size:     

மாகாண சபைத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி அனர்த்த நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (10) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை புனரமைப்பதற்கும் நன்கொடையாளர்கள் வழங்கும் அனைத்து நிதி உதவிகளும் தற்போது திறைசேரியின் பிரதிச் செயலாளரின் மேற்பார்வையின் கீழ் பராமரிக்கப்படும் விசேட கணக்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தேசிய முன்னுரிமைகள் மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு, நியமிக்கப்பட்ட திட்டங்களுக்கு இந்த நிதி வெளிப்படையாகவும் திறமையாகவும் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குதல், அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்தல், சேதமடைந்த பொது உட்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளை மீளக் கட்டியெழுப்புதல் போன்றவற்றில் இந்தத் திட்டங்கள் முதன்மையாக கவனம் செலுத்துவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post