புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியை சந்தித்தார் புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியை சந்தித்தார் - Theevukaran News புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியை சந்தித்தார் புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியை சந்தித்தார்

Adjust the font size:     

இலங்கை கடற்படையின் புதிய தளபதி வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோவிற்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்படி, கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற இந்த சந்திப்பு கடற்படைத் தளபதி பதவியேற்றதன் பின்னர் நடத்தப்பட்ட முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு எனவும், இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மரபுப்படி, இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, ​​இலங்கை கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படைத் தளபதிக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில், கடற்படைத் தளபதியினால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post