நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்க்கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளன.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது கொல்லப்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அமைச்சர் தனது பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் நிறைவேற்றத் தவறியமையினால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று (10) கையொப்பமிட்டுள்ளனர்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்