சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக கொண்டு செல்லப்பட்ட 60,448 கடல் வெள்ளரிகள் ஒரு தொகுதியுடன் 26 சந்தேக நபர்களையும் 12 டிங்கி படகுகளையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலான கஜபாவினால் நேற்று (09) மன்னார் சவுத் பார் கடல் மற்றும் கரையோரப் பகுதியை உள்ளடக்கிய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான பல டிங்கி படகுகள் பரிசோதிக்கப்பட்டன.
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக தரையிறங்குவதற்கு கொண்டு செல்லப்பட்ட கடல் வெள்ளரிகளின் உரிய இருப்பு கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு சட்டப்பூர்வமாகக் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 26 பேரும் மன்னார் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும், அவர்கள் 21 முதல் 64 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள், கடல் வெள்ளரிகள் மற்றும் 12 டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்