உடனடி மற்றும் குறுகிய கால தீர்வாக, பெய்ரா ஏரியில் கடல்நீரை செலுத்தி சுத்தப்படுத்தும் சிறப்பு தொழில்நுட்ப திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
முன்னணி வர்த்தகரான பொறியியலாளர் நஹில் விஜேசூரிய இந்த முயற்சிக்கு முழு நிதியுதவி வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச மற்றும் தனியார் துறைகளை இணைத்து விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (09) ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில் ஆலயத்தின் பிரதமகுருவான வணக்கத்திற்குரிய வைத்தியர் கிரிந்தே அஸ்ஸாஜி நாயக்க தேரரின் தலைமையில் இடம்பெற்றது.
இச் சந்திப்பின் போது இத்திட்டத்தின் எதிர்வரும் கட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பிலான விரிவான தகவல்கள் கலந்துரையாடப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்