நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் இந்திய பிரஜை கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதலின் போது கொல்லப்பட்ட கைதிகளில் இந்திய பிரஜை ஒருவரும் அடங்குவதாக தி ஹிந்து இணையத்தளம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊடகங்கள் மேற்கோள் காட்டிய உத்தியோகபூர்வ ஆதாரங்களின்படி, இறந்தவர் 73 வயதான உன்னிகிருஷ்ணன் எஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த இந்தியப் பிரஜையின் மரணம் தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதுவரையில் உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடவில்லையென்றாலும், சம்பவம் தொடர்பான இராஜதந்திரக் குறிப்பை இந்திய தூதரகம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய இந்திய பிரஜைகள் வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தி இந்து இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்