நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து பெண் கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து பெண் கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர் - Theevukaran News நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து பெண் கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து பெண் கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து பெண் கைதிகள் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

Adjust the font size:     

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் குழுவொன்றை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த கைதிகள் நேற்று (08) வாரியபொல மற்றும் போகம்பர சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் குழுவொன்றும் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

அதன்படி இந்த கைதிகள் திட்டமிட்டு வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டு வருவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த சிறைச்சாலையில் வெளிநாட்டு பெண் கைதிகளும் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post