தெற்கு ஈரானைக் குறிவைத்து அமெரிக்கா புதிய தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதன்படி, ஈரானின் துறைமுக நகரான பந்தர் அப்பாஸ் உட்பட பல பகுதிகளில் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரானுடனான தற்காலிக போர்நிறுத்தம் "முடிந்துவிட்டதாக" அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததை அடுத்து, மேலும் ராணுவ நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்ததை அடுத்து இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.
கப்பல் பாதைகளை அச்சுறுத்தும் ஈரானின் திறனை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் ஈரானிய இராணுவ தளங்களை குறிவைத்து இந்த சமீபத்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.
வான் பாதுகாப்பு அமைப்புகள், ராடார் அமைப்புகள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள இடங்கள் இந்த தாக்குதல்களின் இலக்குகளாக மாறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்