இரண்டு யானை தந்த முத்துகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது இரண்டு யானை தந்த முத்துகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது - Theevukaran News இரண்டு யானை தந்த முத்துகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது இரண்டு யானை தந்த முத்துகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

இரண்டு யானை தந்த முத்துகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது

Adjust the font size:     

எந்தவொரு அனுமதிப்பத்திரமும் இன்றி யானை தந்த முத்துக்களை விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் அதற்கு உதவிய இரு சந்தேக நபர்களும் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொம்பன்ன வீடிய பொலிஸ் எல்லைக்குட்பட்ட மெட்ரோ வீடமைப்பு வளாகத்திற்கு அருகில் யானை தந்த முத்துக்களை விற்பனை செய்வதற்கு தயார் நிலையில் இருந்த போதே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38, 46 மற்றும் 47 வயதுடைய தலவத்துகொட, மீத்தலாவ மற்றும் டோலஸ்பாகே பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக கொம்பன்ன வீதி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post