நகரப் பகுதிகளில் மெட்ரோ பஸ்களை இயக்குவதன் மூலம் முறையான வருமானத்தை ஈட்டுவது, அவற்றின் அதிக செலவைக் கருத்தில் கொள்ள முடியாத விடயம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், இது போன்ற ஒரு பேருந்தின் விலை ரூ. 40 மில்லியன். அதிலிருந்து சாத்தியமான லாபத்தை ஈட்ட, நிகர தினசரி வருமானம் ரூ. 100,000 தேவைப்படுகிறது, இது முற்றிலும் அடைய முடியாதது.
மெட்ரோ பேருந்தில் தான் தனிப்பட்ட முறையில் பயணிக்கவில்லை என்றாலும், அந்த பேருந்துகளில் உள்ள பிளாஸ்டிக் இருக்கைகள் முதுகுவலியை ஏற்படுத்துவதாக அவரது நெருங்கிய கூட்டாளி ஒருவர் கூறியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவை சீனாவில் இருந்து தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட மலிவான, பளபளப்பான வாகனங்கள் என கெமுனு விஜேரத்ன வலியுறுத்தினார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்