மித்தெனிய பிரதேசத்தில் அமைந்துள்ள 'தம்பிலி லஹிரு' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் வீடு நேற்றிரவு (08) ஒரு குழுவினரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வீடு தீக்கிரையாக்கப்பட்ட போது 'தம்பிலி லஹிரு' என்ற நபரின் தாயார் வீட்டில் இருந்ததாகவும், தீயினால் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
'தம்பிலி லஹிரு' கடந்த வருடம் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இந்த நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்