சிறுநீரக சத்திரசிகிச்சைக்காக தற்போது 5,000க்கும் மேற்பட்ட காத்திருப்புப் பட்டியலைக் குறைக்கும் நோக்கில் புதிதாக நிறுவப்பட்ட "மீரிகம சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை நிலையம்" பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் மீரிகம ஆதார வைத்தியசாலை வளாகத்தில் இந்த நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த 20 வருடங்களாக பிரதேசத்தில் இல்லாமல் இருந்த இந்த தேசிய தேவை, சுகாதார அமைச்சின் தொற்றா நோய் தடுப்பு செயலணியின் தலையீட்டினாலும் அமைச்சரின் பணிப்புரையினாலும் 3 மாத குறுகிய காலப்பகுதியில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்