டெங்கு அதிக ஆபத்துள்ள 60 வலயங்களை உள்ளடக்கிய விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று (13) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் மேல்மாகாணத்தில் 23 டெங்கு அபாய வலயங்கள் அடங்குவதுடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அந்த 23 வலயங்களுக்கு மாத்திரம் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன.
இந்த வருடத்தில் இதுவரை 68,071 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இதில் 47 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்