பாடசாலை மாணவர்களை நுளம்புக்கடியில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக சீருடைக்கு மேலதிகமாக கை, கால்களை மறைக்கும் பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, பாடசாலை மாணவர்களிடையே டெங்கு பரவுவதைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவுறுத்தல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
உரிய தரத்திலான கொசு விரட்டிகளைப் பயன்படுத்த மாணவர்களை கற்றுத்தருமாறும் உரிய அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்