தற்போதைய அரசாங்கம் தனது செயற்பாடுகளில் தோல்வியையே நிரூபித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் எம்.பி., ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தை நடைமுறைப்படுத்திய 6 மாத காலப்பகுதிக்குள் டெங்கு நோயின் தாக்கம் அண்மைய வருடங்களில் காணமுடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது.
தற்போது ஏறத்தாழ 70,000 நோயாளர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது அரசாங்கத்தின் இயலாமையை தெளிவாகக் காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நாட்டின் ஜனாதிபதி ஒருவருக்கு வெளிநாட்டு அரசொன்று வீசா வழங்க மறுத்தமை தொடர்பில் முதல் தடவையாக தகவல்கள் வெளியாகி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இந்த விவகாரம் தொடர்பான உள் விவரங்கள் குறித்து தாம் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்