விசா மறுப்பு காரணமாக ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயம் பிற்போடப்பட்டதாக வெளியான தகவல் பொய்யானது – அமைச்சரவை பேச்சாளர்

Adjust the font size:     

விசா மறுப்பு காரணமாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பிரான்ஸ் விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி பொய்யானது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதன்படி, பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் இடம்பெற்றுவரும் இராஜதந்திர கலந்துரையாடலின் அடிப்படையில், பரஸ்பரம் வசதியான திகதி மற்றும் நேரம் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post